சுரேஷ் காமாட்சி: ரசிகர்கள் பல குறைகளைச் சொல்கிறார்கள்

பொது விழாக்களில் நியாயமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் பட்டெனப் பேசிவிடுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எப்போதும் சூடும் குளிர்ச்சியும் சேர்ந்தே அடிக்கும் வகையில் பேசும் அவர், அண்மையில் 'சாரல்' பட விழா வில் பேசியது சத்தியத்திலும் சத்தியம் என்கிறார்கள் திரையுலகத்தினர். "இங்கு பேசிய பலரும் இது ஒரு குடும்ப விழா என்றார்கள். ஓர் இசை வெளியீட்டு விழா குடும்ப விழாவாக இருக்கக்கூடாது.

இன்றைக்கு தயாரிப்பாளர்கள் நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தான் சிறு பட்ஜெட் படங்களை பிரபலமாக்குவதற்கு உள்ள ஒரே வழி. "இந்த நிகழ்ச்சிகளுக்குச் செய்தியா ளர்களைத்தான் அதிகம் அழைக்க வேண்டும். (அவர் இவ்வாறு பேசிய தற்கு காரணம் படத்தின் தயாரிப்பாள ருக்குத் தேவையான சொந்த பந்தங்கள் அரங்கை நிறைத்துவிட, பல செய்தி யாளர்களுக்கு இடமே இல்லை) சிறிய படங்கள் மக்களைச் சென்றடைய செய்தியாளர்கள், குறிப்பாக இணையத் தளங்கள்தான் முக்கியம்," என்றார் சுரேஷ் காமாட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!