தமிழ்ப் படங்களுக்கு தற்காலிக முழுக்கு

பல படங்களில் நடித்துவரும் மாளவிகா மேனன் சிறிது காலம் தமிழில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டிருக்கிறார். 'இது வேற மாதிரி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மேனன், பின்னர் 'விழா' படத்தில் நாயகி ஆனார். 'நிழலா நிஜமா' படத்திலும் நடித்தார். இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்குத் தற்காலிக விடுமுறை விட்டிருக்கிறார். ஏனாம்? "இப்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறேன்.

அடுத்து கல்லூரி படிப்பையும் தொடரும் எண்ணம் இருக்கிறது. இப்போது மலையாளப் படங்களில் நடிக்கிறேன். படிப்பதற்கு தடையில்லாத வகையில் நேரம் கிடைக்கும்போது மட்டுமே படப்பிடிப்புக்குச் செல்கிறேன். "வேறு மாநிலங்களில் சென்று நடித்தால் எனது படிப்பு பாதிக்கப்படும். பிரச்சினை ஏற்படும். எனவே தமிழ்ப் படங்களில் நடிப்பதற்குத் தற்காலிகமாக விடுமுறை விட்டிருக்கிறேன். "பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு தமிழ்ச் சினிமாவில் நடிப்பேன். கல்லூரியில் படிப்பதும் எனது லட்சியம். எனவே அதற்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடிக்க முயற்சி செய்வேன். அது பற்றி ஒருசில மாதங்களில் முடிவு செய்வேன்," என்கிறார் மாளவிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!