பிரசாந்த்: பொருத்தமான நாயகன் கிடைத்தார்

ஜி.வி. பிரகா‌ஷுக்கு இது புத்துணர்ச்சி ஆண்டு. இசையமைப் பாளராக இருந்த அவர் நடிப்பில் கால்பதித்து மூன்றாவது வெற்றிக்கு மிக அருகில் காத்தி ருக்கிறார். இப்போது ஜி.வி. பிரகா‌ஷின் ‘புரூஸ் லீ’ கிட்டத்தட்ட தயாராகி விட்டது. ‘நாளைய இயக்குநராக’ பளிச்சென வெளியில் வந்த பிரசாந்த் பாண்டியராஜ்தான் இயக்கம். திடீரென நகைச்சுவைப் படத் தில் நடிக்கிறீர்களே? “நாமெல்லாம் வீட்டில் ஜோக்கடித்து சிரிக்கிறோமே... நமக்கு யாராவது சொல்லியா கொடுத்தார்கள்? எதையும் சிரமம் என நினைத்தால்தான் சிரமம். நாமும் நகைச்சுவையில் அசத்து வோம் என்று முடிவு செய்து களமிறங்கிவிட்டால், பிறகு நாம் செய்வதே நகைச்சுவை. நமக்கும் வரும் என எதையும் நம்பிவிட்டால் போதும், அது தன்னால் நம் கைக்கு வரும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை,” என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.