மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை - பிரியாமணி

கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். திரையுலகத்தினரும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், நடிகை பிரியாமணி தான் வெளியிட்ட கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் எழவில்லை என்று கூறியுள்ளார். அண்மையில் கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் இனி பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று தாம் நினைப்பதாகப் பிரியா மணி கூறியுள்ளார். அவரது இக்கருத்து பொதுவெளியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

“மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல்களைப் படிக்கும்போது அதிர்ச்சியாக, வேதனையாக இருக்கிறது. இந்தியாவில் இனி பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. “இதே நிலை தொடர்ந்தால் நம் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது. பெண்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்குச் செல்ல வேண்டியதுதான். நமது நாட்டில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை தெய்வமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பிறகு எப்படிப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

“இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் குறைய வேண்டும் என்றால், அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,” என்று மிகுந்த கோபத்துடன் கூறு கிறார் பிரியாமணி. அவரது இந்தக் கருத் துக்கு சமூகவலைத்தளங் களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் சரி யாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று மற் றொரு தரப்பினர் மல்லு கட்டுகிறார்கள். இந்நிலையில் தன் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே எழவில்லை என பிரியா மணி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.