தமிழிலும் நடிக்க விரும்பும் பிரியங்கா

‘வெயில்’, ‘தொ(ல்)லைபேசி’, ‘செங்காத்து பூமியிலே’ ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பிரியங்கா. இடையில் தமிழில் காணாமலேயே போய்விட்டார். ஆனால், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்கிறாராம். தமிழில் ஏன் நடிப்பதில்லை? “என்ன செய்வது? எனக்கு தமிழும் பிடிக்கும், தமிழ்நாட்டையும் ரொம்பப் பிடிக்கும். அதைவிட தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு உயிர் என்றே கூட சொல்லலாம். ‘வெயில்’ படத்தில் அறிமுகமான போது அப்படியொரு வரவேற்பு கொடுத்தனர் தமிழ் ரசிகர்கள்.

“இருந்தாலும், அப்போது மலையாளத்தில் நிறைய படங்களில் ஒப்பந்தமாகிவிட்டேன். அங்கே போனபிறகு இங்கே திரும்பி வருவதற்கான நேரமே கிடைக்கவில்லை. சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது எல்லாம் வாங்கிவிட்டேன். “தமிழில் நடிக்கக்கூடாது என்கிற எண்ணமெல்லாம் இல்லை. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன்,” என்கிறார் பிரியங்கா.