உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

நல்ல கதை அமைந்தால் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிப் பேன் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மனிதன்’. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களி டம் பேசிய உதயநிதி, காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ஆர்வம் தனக்கு உண்டு என்று கூறி உள்ளார். “என்னுடைய முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘மனிதன்’ என்பேன். இந்தப் படத்தில்தான் சரியான, கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி உள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர்.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு எனது தந்தை என்னைக் கட்டியணைத்து பாராட்டினார். அது மட்டுமல்ல; உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும் கூறினார். “ஆனால் ‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக் கிறது. தற்போதுள்ள அரசியல் சூழ லில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ‘கெத்து’ படத்திற்கும் வரிவிலக்கு வழங்கப்படா மல்தான் இருந்தது. நீதிமன்றம் சென்ற பிறகே வரிவிலக்கு கிடைத்தது. “நல்ல கதை அமைந்தால் போலிஸ் வேடங்களில் நடிப்பேன். அதற்கான ஆர்வமுண்டு. படத்தை தயாரித்து வெளியிடுவதுதான் இப்போது பெரிய சாதனையாக உள்ளது,” என்கிறார் உதயநிதி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்