பயிற்சிக்காக குடிசை வீட்டில் தங்கும் சமந்தா

வெற்றிமாறன் இயக்க இருக்கும் ‘வடசென்னை’ படத்தில் இயல்பாக நடிப்பதற்காக குடிசைவாசிகளுடன் தங்கி நெருங்கி பழகி வருகிறாராம் சமந்தா. தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் படம் ‘வடசென்னை’. ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் வடசென்னையின் ஒரு தோற்றத்தைக் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன், அடுத்த படத்தை ‘வடசென்னை’ என்ற பெயரிலேயே எடுக்கிறார். இதற்காக பல ஆண்டுகள் இந்தப் பகுதியைப் பற்றி தீவிர ஆய்வு நடத்தி இந்தக் கதையைத் தயாரித்துள்ளார். ‘வடசென்னை’யில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்காக வடசென்னை பகுதியில் வாழும் குடிசைவாசிப் பெண்களுடன் தங்கி இருந்து பழகி அவர்களின் பேச்சு, நடைமுறை, உடல் மொழி போன்றவற்றைக் கற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் சமந்தா.

சென்னையில் பல்லாவரம் பகுதியில் பிறந்து, படித்து வளர்ந்த சென்னைவாசி என்றாலும், ‘வடசென்னை’ படத்தில் இயல்பாக நடிப்பதற்காக சமந்தா இந்த பயிற்சி எடுக்கிறார். இதற்காக வடசென்னை குடிசைப் பகுதியில் உள்ள வீட்டில் தங்குவதற்காக 10 நாட்கள் ஒதுக்கி இருக்கிறார். அப்போது மக்களோடு மக்களாகப் பழகி இந்தப் படத்துக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வாராம். சமந்தா எந்த இடத்தில் எந்த வீட்டில் எப்படி தங்குவார்? என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next