காணாமல் போன கதாநாயகி: பதறிப்போன படக்குழுவினர்

“உலகிலேயே எந்த மொழிக்கும் இல்லாத பெருமைகள் செம்மொழியாம் தமிழுக்கு உண்டு. வார்த்தை உச்ச ரிப்பு, இலக்கணக் கட்டு என்று தமிழுக்குரிய தனித்தன்மைகளை வேறெந்த மொழியோடும் ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. அத்தகைய மொழிக்கு பெருமை சேர்க்கும் படமாக ‘சொல்’ இருக்கும்,” என்கிறார் நடிக ரும் இயக்குநருமான பாவண்ணன். தலைப்பே கதையைச் சொல்லி விடுகிறதே?

“உண்மைதான். ஆனால், இதை விட பொருத்தமான தலைப்பு வேறு கிடைக்கவில்லை. கதைக் கருவை ஒரு தலைப்பு சொன்னால் அது படத்துக்கு கூடுதல் வலிமைதான் என்று நினைக்கிறேன். காதலும் இல்லை கல்யாணமும் இல்லை. ஆனால் கணவன் - மனைவி என்கிற வித்தியாசமான கதைக்களம். காதலே இல்லாமல் இருவர் சேர்ந்து வாழமுடி யுமா என இதில் அலசி இருக்கிறேன்.

“கண்டதும் காதல் என்பதுதான் நம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைக் கரு. எனினும் அதைக் கடந்ததுதான் சராசரி தமிழனின் வாழ்க்கை. கை தொடாமல், கால் படாமல் மெய்ப்பட வாழும் வாழ்க் கையின் பக்கங்களை என் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் நிச்சயமாகப் புரட்டிப் பார்ப்பான். “வி.சேகர் இயக்கிய படங்களில் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர்கள் விஜயா, சரஸ்வதி ஆகியோர் என்னை இந்தப் படம் மூலமாக கதாநாயக னாகவும் இயக்குநராகவும் அடையாளப் படுத்துகிறார்கள்.”

‘சொல்’ படத்தின் படப்பிடிப்பில் பாவண்ணன், அஞ்சனாராஜ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சைமா’ விருதைப் பெற்ற ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தனுஷ், அனிருத் உள்ளிட்டோர்.

20 Aug 2019

சிறந்த நடிகர், நடிகையாக தனுஷ், திரிஷாவுக்கு விருது