மே 27ஆம் தேதி வெளியீடு காணும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’

சிம்பு நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் பல வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் வெளி வந்தபாடில்லை. ஒருவழியாக இப்படத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. சிம்பு, -நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. காதல் முறிவுக்கு பிறகு சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்த படம் இது. சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுக மாகியுள்ள படமும் கூட. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டே வந்தது.

இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்தனர். எனினும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், வருகிற மே 27ஆம் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியாக கூறுகின்றனர் படக்குழுவினர். மேலும், இப்படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகையும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை 'பசங்க' பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!