இசையமைப்பாளரே நாயகனாக நடிக்கும் புதுப்படம் ‘அம்சனா’

யூடியூப்பில் தான் வெளியிட்ட இசைத்தொகுப்பு பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, அதையே திரைப்படமாக எடுத்து வருகிறார் டிஜே என்ற இசையமைப்பாளர். ஒரு காலத்தில் சினிமாவை வந்த டைய ஒரு வழிப்பாதைதான் இருந்தது. இப்போது பல வழிப் பாதைகள் உருவாகி இருக்கின்றன. தொலைக்காட்சி மூலமாக சிலர் கவனம் பெறுகிறார்கள். குறும்படங்கள், இசைத்தொகுப்புகள் வழியும் சிலருக்கு அதிர்ஷ்டம் வாய்க்கிறது. மொத்தத்தில் பல திசைகளில் இருந்தும் எளிதில் சினிமாவில் நுழைய முடிகிறது.

அப்படித்தான் இசையமைப்பாளர் டிஜேவும் திரையுலகில் கால் பதித்துள் ளார். புதுமுகங்களின் உழைப்பில் ‘அம்சனா’ என்கிற ஒரு படத்தை உருவாக்கி வருகிறார் டிஜே. முன்னதாக அவர் ‘முத்து முத்து’ என்ற பெயரில் வெளியிட்ட இசைத் தொகுப்பானது 90 லட்சம் பேரின் ஆதரவைப் பெற்றுள்ளது. அதில் இசை யமைப்பாளர் டிஜே பாடி இருப்பதுடன் நடிக்கவும் செய்துள்ளார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்