ரகசியமான சிம்புவின் மூன்றாவது காதல்

சிம்பு நயன்தாரா காதல் பிரிவுக்குப் பிறகு அவர்கள் இருவரும் நடித்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தில் சிம்புவிற்கு மூன்று காதல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிம்புவின் இரண்டு காதல்கள் பற்றிக் கூறிய இயக்கு நர் பாண்டிராஜ், 3வது காதலை ரகசியமாக வைத்து உள்ளார். தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் எல்லாம் அதிகமான சம்பளம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக் கிறார்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் வலியையும் வேதனை யும் இப்படத்தில் கூறி இருக்கிறார் பாண்டிராஜ்.

சிம்பு நடித்த படங்களில் சண்டைக் காட்சியே இல்லாத படமாக இது இருக்கும் என்று இயக்குநர் சொன்னவுடன், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் “அய்யோ.. சிம்புவுக்குச் சண்டை இல்லயா?” என்று முறைக்க, “இதில் சண்டை வைக்கணும்னா சிம்பு - நயன் இருவருக்கும்தான் வைக்கணும்,” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். இப்படத்தில் சிம்புவுக்கு மொத்தம் மூன்று காதல்கள் இருக்கின்றன. சிம்பு=ஆண்ட்ரியா காதலைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் பாண்டிராஜ். சிம்பு-நயன்தாரா காதலை யதார்த்தமாகக் காட்டியிருக் கிறாராம். ஆனால், மூன்றாவது காதல் பற்றி ரகசியம் காக்கிறது படக்குழு. சிம்பு-நயன்தாரா முதல் பாதியில் இணைந்திருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் சண்டை வரும் காட்சிதான் இடைவேளை, பிறகு பிரிந்தவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் படம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்