மும்பை படப்பிடிப்பில் பங்கேற்கும் தனுஷ்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில் தனு‌ஷுக்கு இணையாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு இரு வாரங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த உள்ளனராம்.

படத்தின் முக்கியமான காட்சிகள் அங்கு எடுக்கப்படுகின்றன. காதல் படமாக உருவாகி வரும் இதில் தனுஷ் மீசை தாடி இல்லாமல் மிகவும் அழகாக தோற்றமளிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் ‘தொடரி’, ‘கொடி’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்கு விநியோகிப்பாளர்கள் மத்தியில் இப்போதே பலத்த வரவேற்பு இருப்பதாகக் கேள்வி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்