பிரியாமணிக்கு கெட்டிமேளம்

பிரியாமணி நீண்ட நாட்களாகவே ஒருவரைக் காதலித்து வந்தார் என்பது தெரிந்த சங்கதி தான். இந்நிலையில், அவரது நிச்சயார்த்தம் எளிமையாகவும், ரகசியமாகவும் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பிரியாமணியின் வீட்டில் நடந்த இந்நிகழ்வில் அவருக்கு நெருக்க மானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. பின்னர் அமீர் இயக்கத்தில் ‘பருத்திவீரன்’ படத் தில் நடித்தார். அந்த ஒரே படம் பிரியாமணியின் மதிப்பை உச்சிக்குக் கொண்டு சென்றது. ‘பருத்திவீரன்’ படத்துக்காக அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தார்.

எனினும் அவர் எதிர்பார்த்தபடி எந்த படமும் கைகொடுக்கவில்லை. பிரியாவின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் தோல்வி கண்டதால் அவருக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கினார். அதிக கவர்ச்சி காட்டியபோதும், முன்னணி இயக்குநர்கள் அவரைக் கண்டு கொள்வில்லை. இதையடுத்து, சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் பிரியாமணி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கவே அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ள பிரியாமணி முடிவு செய்தி ருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. அதற்கேற்ப கடந்த வெள்ளிக் கிழமையே பெங்களூரில் உள்ள பிரியாமணியின் விட்டில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலரான முஸ்தபாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த விழாவில் இருவீட்டாரின் உறவினர்களும் மண மக்களின் நெருங்கிய தோழர்களும் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்