முழு நீள நகைச்சுவைப் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’

‘மிர்ச்சி’ சிவா நடிக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இதில் நைனா சர்வர் கதாநாயகி. சீனிவாசன், சென்ட்ராயன், மன்சூர் அலி கான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரைவண்ணன். “இது முழு நீள நகைச்சுவைப் படமாக தயாராகிறது. நிச்சயம் ரசிகர்கள் மனதில் இப்படம் இடம்பிடிக்கும்,” என்கிறார் இயக்குநர் திரைவண்ணன்.