இலக்கைக் காட்டிய கடவுளுக்கு நன்றி - தன்‌ஷிகா

சிறிய வர­வு­செ­ல­வுத் திட்ட படங்களில் அறி­மு­க­மாகி நடித்து வந்த தன்‌ஷிகா, எஸ்.பி.ஜக­நா­த­னின் 'பேராண்மை', பாலாவின் 'பரதேசி', வசந்த­பா­ல­னின் 'அரவாண்' படங்களில் நடித்­த­தன் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் முக்கிய நடிகை­யானார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜி­னி­யின் மகளாக 'கபாலி'யில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்­ச­லுக்­குத் தயாராகி வரு­கிறார். தன்‌ஷிகா வாய்ப்­பு­களுக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது கைகொ­டுத்த படம் 'காத்தாடி'. அண்மை­யில் வெளி வந்த 'கத சொல்­லப்­போ­றோம்' படத்­தின் பாடல் வெளி­யீட்டு விழா அண்மை­யில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட தன்‌ஷிகா "சின்ன வய­தி­லேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்­டேன். படிக்­காத நான் நடிப்­பு­தான் இனி எல்லாம் என்று இருந்­தேன். "ஆரம்பக் காலத்­தில் எத்­தனையோ சிக்­கல்­கள், பிரச்­சினை­கள். அவற்­றி­லி­ருந்து என்னை காப்­பாற்றி வழி­ந­டத்தி வந்தது எனது மாமாவும் எனது தந்தை­யும்­தான். நான் எப்­போ­தும் ஓடிக்­கொண்டே இருப்­ப­வள். படப்­பி­டிப்பு இல்லாத காலங்களில் எதை­யா­வது கற்றுக் கொண்டே இருப்­பேன். "பாண்­டி­யன் மாஸ்ட­ரி­டம் சிலம்பம் ஜிம்னாஸ்­டிக் கற்றேன். இலக்கு இல்­லா­மல் ஓடிக் கொண்­டி­ருந்­தேன். அதன் பிறகு பெரிய படங்கள், பெரிய இயக்­கு­நர் என்று பய­ணம் செய்து இன்று இந்த இடத்­தில் நின்று கொண்­டி­ருக்கிறேன். இது அனைத்­துக்­கும் கட­வு­ளுக்கு நன்றி கூறிக்­கொள்­கி­றேன்," என்று உருக்­க­மா­கப் பேசி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!