‘இறைவி’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள்

­­­'இறைவி' படத்­தில் படத்தயா­ரிப்­பா­ளர்­களைத் தவறாக சித்­தி­ரித்­ததோடு தமி­ழர்­களின் மனம் புண்­படு­மாறு வச­னங்கள் அமைத்­த­தற்­கும் இயக்­கு­நர் கார்த்­திக் சுப்­பு­ரா­ஜிற்­கு படம் இயக்கத் தடை­வி­திக்தத் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்கத் தலைவர் கலைப்­புலி தாணு தலைமை­யில் குழு ஒன்று கூடியிருக்கிறது. 'இறைவி' படத்­தின் ஒரு காட்­சி­யில் "தமிழ் தமிழ் எனப் பேச­ற­வங்களுக்­குச் சரியான செருப்­படி கொடுத்­தீங்க," என்ற ஒரு வசனம் தமிழ் இன உணர்­வா­ளர்­களை மிகவும் கோபப்­படுத்­தி­யி­ருக்­கிறது. தமிழ்­நாட்­டில் இருந்­து­கொண்டு தமிழ்ப் படம் எடுத்­துக்­கொண்டு தமி­ழர்­களையே கேவ­லப்­படுத்­து­வதா என்று படம் பார்த்­த­வர்­கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க ஆரம்­பித்­ துள்­ளார்­கள்.

இதற்­கிடை­யில் தயா­ரிப்­பா­ளர்­களை­யும் மிகவும் கேவ­லப்­படுத்தி படம் எடுத்­தி­ருப்­ப­தால் அவ­ருக்கு தயா­ரிப்­பா­ளர்­களிடையேயும் பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்­கிறது. தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதில் "உங்களின் 'இறைவி' படம் பார்த்­தேன். படம் நன்றாக இருந்தது. எஸ்.ஜே.சூர்­யா­வின் நடிப்­புக்கு ஒரு பூங்­கொத்து. "சிறிய வய­தி­லேயே தயா­ரிப்­பா­ளர் ஒருவர் மனது வைத்­த­தால் இயக்­கு­ந­ரா­கும் பாக்­கி­யம் பெற்­ற­வர் நீங்கள்.

ஆனால் இதற்கெல்­லாம் கார­ண­மான தயா­ரிப்­பா­ளர் என்கிற ஓர் இனத்தை விஜி முருகன் (எஸ்.ஜே.சூர்யா) என்­ப­வ­ரின் கதா­பாத்­தி­ரத்­தின் மூலம் கேவ­லப்­படுத்­தி யிருக்கிறீர்கள். "படத்தில் தயாரிப்பாளர் ஒருவர் இதற்கு முன்னால் நான் என்ன பண்­ணிக்­கிட்­டி­ருந்­ தேன்னு தெரி­யு­மான்னு கேட்கும் வசனத்தில் ஆரம்­பித்து அவரின் கடைசி நிமிடம் வரை தயா­ரிப்­பா­ளர் என்­ப­வன் படுமோசமானவன், எந்த எல்லைக்­கும் போவான், அவனால் ஒரு இயக்­கு­நரோ படைப்­பா­ளியோ அவன் குடும்பமோ சாதா­ர­ண­மாக நசுக்­கப்­படும் என்று அடுக்­க­டுக்­காக சேற்றை வாரி­யிறைத்­திருக்கிறீர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!