சேதுபதி, மடோனா மீண்டும் கூட்டணி

‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த மடோனா செபஸ்டியான், மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைய இருக்கிறார். ‘அனேகன்’ படத்தைத் தொடர்ந்து டி.ராஜேந்தர், விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.

இதில் நடிக்கும் கதாநாயகிக்கான தேடுதல் வேட்டையை கடந்த சில நாட்களாக படக்குழுவினர் முடுக்கி விட்டிருந்தனர். கடைசியாக, மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’, தமிழில் வெளிவந்த ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களில் நடித்த மடோனா செபஸ்டியானை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய் சேதுபதியுடன் மடோனா செபஸ்டியான் இணையும் இரண்டாவது படம் இது.

இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா, கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர். ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கும் நிலையில், மற்ற நடிகர் நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.2016-06-10 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்