நயனின்மூ ன்றாவது காதலும் முறிவு

ஆறு படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ­­­ந­யன்­தாரா தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்=1 கதா­நா­ய­கி­யாக இருந்து வரு­கிறார். ரஜி­னி­காந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதா­நா­ய­கர்­களு­டன் சேர்ந்து நாயகியாக நடித்த பெருமை­யும் நயன்­தா­ரா­வுக்கு உண்டு.

லைட்பாய் முதல் எல்லா தொழி­லா­ளர்­களு­ட­னும் அன்பாகப் பழ­கு­வார், படப்­பி­டிப்பு இறுதி நாளில் எல்­லோ­ருக்­கும் பரிசு பொருட்­களை வாரி வழங்­கு­வார், என்­றெல்­லாம் நயன்­தா­ரா­வின் நல்ல குணங்களைப் பட உல­கி­னர் பட்­டி­ய­லி­டு­கின்ற­னர். ஆனால், இன்னொருபுறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்­பட்டு வரு­கிறார். 2006ஆம் ஆண்டில் வல்­ல­வன் படத்­தில் நடித்த போது சிம்­பு­வு­டன் அவரது முதல் காதல் துளிர்த்­தது.

இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்து கொள்­ள­வும் தயா­ரானார்­கள். ஆனால் சில மாதங்களி­லேயே அந்தக் காதல் முறிந்து போனது. அதன்­பி­றகு 2009ஆம் ஆண்டில் பிர­பு­தே­வா­வு­டன் நயன்­தா­ரா­வின் இரண்டா­வது காதல் மலர்ந்தது. நயன்­தாரா மதம் மாறி பிர­பு­தே­வாவை மணந்து சினி­மா­வுக்கு முழுக்­குப் போடவும் தயா­ரானார்.

ஆனால் கடைசி நேரத்­தில் அந்தக் காதலும் முறிந்து போனது. மூன்றா­வ­தாக தன்னை காது­கே­ளாத மாற்­றுத்­தி­றனாளி பெண்ணாக 'நானும் ரவு­டி­தான்' படத்­தில் நடிக்க வைத்த இயக்­கு­நர் விக்னேஷ் சிவனை காத­லித்­தார். இரு­வ­ரும் நெருக்­க­மாக இருக்­கும் படங்கள் வெளியாகி இவர்­கள் காதலை உறு­திப்­படுத்­தின.

விக்னேஷ் சிவ­னுக்­குச் சென்னை கிழக்­குக் கடற்­கரைச் சாலையில் நயன்­தாரா காதல் பரிசாக வீடு வாங்கி கொடுத்து இருப்­ப­தா­க­வும் கிசு­கி­சுக்­கள் வந்தன. ஆனால், தற்போது இந்தக் காதலும் நிலைக்­க­வில்லை. விக்னேஷ் சிவ­னு­டன் நயன்­தாரா சண்டை போட்டுப் பிரிந்து விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதற்­கான காரணம் தெரி­ய­வில்லை.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா. படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!