கருணாஸ் இசையமைக்கும் புதிய படம் - ‘பகிரி’

நடிகர் கருணாஸ் இசையமைப்பில் உருவாகும் படம் ‘பகிரி’. இப்படத்தின் கதையை எழுதி, தயாரித்து, இயக்குபவர் கார்வண்ணன். “இது ‘வாட்ஸ் அப்’பை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும். நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். நாயகி ஷர்வியா. நகைச்சுவையும் காதலும் கலந்த இக்கதை ரசிகர்களைக் கவரும். இன்றைய சமூகச் சூழலில் இளையர்களின் காதல் எப்படி இருக்கிறது, வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை விவரிக்கிறோம்,” என்கிறார் கார்வண்ணன்.