அழகு தேவதையாக சிவகார்த்திகேயன்

'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி நேற்று முன்தினம் வெளியானது. அதில் அழகு தேவதையாக காட்சி அளிக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் அழகாக இருப்பதாலும் சிறப்பாக நடிப்பதாலும் அவர் இல்லாத படம் எதுவும் தற்பொழுது இல்லை என்று சொல்லலாம். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் ஒரு வேடம் பெண்ணாக நடிக்கிறார். பெண் வேடத்தில் அவர் நடித்திருக்கும் 'நர்ஸ்' அக்கா வேடம்தான் முதல் சுவரொட்டியாக இயக்குநர் சங்கர் வெளியிட்டார். அதில் ஒரு பெண் போலவே காட்சி அளிக்கிறார் சிவகார்த்திகேயன்.

மேலும், 'அவ்வை சண்முகி'யில் கமல் பெண் வேடத்துக்காக அதிகமான சிரத்தை எடுத்துக்கொண்டதுபோல் இந்த 'நர்ஸ்' அக்கா வேடத்துக்காகவும் மணிக்கணக்கில் ஒப்பனை செய்துகொண்டு பெண்ணைப்போல நடித்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதோடு, பாடல் காட்சியிலும் சிவகார்த்திகேயனை ஒரு பெண்ணாகவே காட்சிப்படுத்தவேண்டும் என்பதற்காக நடன மங்கைகள் ஆடுவது போன்று நளினமான உடல் அசைவுகளைக் கொடுத்து அவரை ஆட வைத்திருக்கிறாராம் நடன இயக்குநர் ராஜூ சுந்தரம்.

பெண்ணாக நடிக்கும்போது படப்பிடிப்புத் தளத்தில் அனுபவம் எப்படி இருந்தது என்று சுவரொட்டி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கேட்கையில், "ரெமோ' படப்பிடிப்பில் நான் பெண் வேடம் போட்டுக்கொண்டு நடித்தேன். அதன்பிறகு அதே வேடத்தில் எடுத்தக் காட்சிகள் எப்படி இருக்கின்றன என்பதற்காக கணினியில் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது யாரோ ஒருவர் என் இடுப்பைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார். நான் திரும்பிப் பார்த்தேன். யார் கிள்ளினார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு என்னுடைய பெண் வேடம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!