‘வீரசிவாஜி’ படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டார் ஏ.ஆர். முருகதாஸ்

விக்ரம் பிரபு நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'வீரசிவாஜி'. நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மேலும், ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் உள்ளனர். இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 'வீரசிவாஜி' முன்னோட்ட காட்சித் தொகுப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில் பேசிய அவர், "முன்னோட்ட காட்சிகள் அருமையாக உள்ளன. நிச்சயமாக இப்படம் வெற்றியடையும்," என்று படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!