சைமா: ‘குத்து’ பாடல்களுக்கு ஒத்திகை

ப பாலசுப்பிரமணியம்

ரசிகர்களின் உள்ளங்கவர்ந்த ஹன்சிகா மோத்வானி (இடது), பிரணிதா (வலது), ஐஸ்வர்யா ராஜேஷ், அமைரா, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, சுருதிஹாசன் போன்ற திரையுலகப் பிரபலங்கள் இன்றும் நாளையும் சன்டெக் மாநாட்டு கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ள 'சைமா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு நடன விருந்து படைப்பதற்கான ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர்.

மும்பையிலிருந்து நேற்றுக் காலை சிங்கப்பூர் வந்தடைந்தார் ஹன்சிகா. சென்ற முறை துபாயில் 'சைமா' விருது நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் 'அரண்மனை' திரைப் படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகை' விருதை அவர் தட்டிச் சென்றார் என்பது நாமறிந்ததே. கறுப்புக் கண்ணாடியும் டிசைனர் உடையும் அணிந்து கவர்ச்சியாக ஹோட்டலுக்கு வந்து இறங்கிய அவர் சில மணி நேரம் கழித்து, வெள்ளைச் சட்டை கறுப்பு காற்சட்டையில் நடன ஒத்திகைக் காகக் களமிறங்கினார்.

இயல்பாகவே சிரிப்பும் துடிப்பும் நிறைந்த ஹன்சிகாவின் தாக்கம் நடன அறைக்குள் தென்பட்டது. சக நடனமணிகள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர், மகிழ்வூட்டினர். அதற்கு ஏற்ப, அவரது முழுமையான ஈடுபாடும் அந்த ஒத்திகையில் இருந்தது. 'டார்லிங்கு டம்பக்கு' பாடலுக்கு வேறு எந்த நடிகை ஆடினாலும் அதற்குரிய முக பாவனை, அசைவுகளைக் காட்டிவிட முடியாது என்பதை நேற்று நடைபெற்ற ஒத்திகையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பாடலுக்கு 'சைமா' நிகழ்ச்சியில் ஹன்சிகா நாளை நடனம் ஆட இருக்கிறார்.

இவரைப் போன்றே சக நடனமணிகளின் மனதை வென்றார் 'மாஸ்' படத்தில் சூரியாவுடன் நடித்த பிரனிதா. இன்றைய கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களுக் கான விருது நிகழ்ச்சியில் இவரின் குத்தாடத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். தற்போது நடிகர் ஜெய்யுடன் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' எனும் தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரணிதா. நேற்றுக் காலையிலிருந்தே அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், வேதிகா, ராணா, குஷ்பு, ராதிகா சேத்தன் என ஒவ்வொருவராக சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தனர்.

விக்ரம், சிரஞ்சீவி, நயன்தாரா, நித்யா மேனன், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ் ராஜ், அல்லு அர்ஜுன், சரத்குமார், ஏமி ஜக்சன், சாய் பல்லவி, ஷ்ருதிஹாசன், லட்சுமி ராய், அஸ்வினி புனித் ராஜ்குமார், விஜய் ஜேசுதாஸ், பார்வதி வேணுகோபால் நகைச்சுவை நடிகர் சதீஷ் போன்ற நட்சத்திரங்கள் இன்று சிங்கப்பூருக்கு வருகின்றனர். நிகழ்ச்சிக்கான $45, $65, $85, $125, $175, $225, $325 நுழைவுச் சீட்டுகளை http://sistic.com.sg வழி வாங்கலாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 16 விருதுப் பிரிவுகள் உள்ளன. வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கி இரு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவர். இந்த விருதுகளை முடிவு செய்ய ஒவ்வொரு மொழிப் பிரிவுக்கும் ஒரு தனி நடுவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனோடு, ரசிகர்களும் 'சைமா' இணையப்பக்கம் வழி விருதுக்கு வாக்களிக்கலாம். கூடுதல் செய்தி: சுதாஸகி ராமன்

படங்கள்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!