சிங்கப்பூருக்கு பறந்து வந்த நட்சத்திரக் கூட்டம்

முஹம்­­­மது ஃபைரோஸ், ப. பால­­­சுப்­­­பி­­­ர­­­ம­­­ணி­­­யம்

சாங்கி விமான நிலை­­­­­­­யத்­­­­­­­தின் குடி­­­­­­­நுழைவு சோதனைச் சாவடியை இவர் கடந்த­­­­­­­தும் உட­­­­­­­ன­­­­­­­டியே ஒரு ரசிகர் இவரோடு புகைப்­­­­­­­ப­­­­­­­டம் எடுத்­­­துக்­­­கொள்ள அணு­­­கினார். சற்றும் தாம­­­­­­­திக்­­­­­­­காது, புன்­­­­­­­னகைத்­­­­­­­த­­­­­­­வாறு ரசி­­­க­­­ரின் விருப்­­­­­­­பத்­­­­­­­திற்கு இணங்­­­­­­­கினார் இவர். அவர் வேறு யாரு­­­­­­­மல்ல, நடிகை சுகாசினி மணி­­­­­­­ரத்­­­­­­­னம்­­­­­­­தான். 1980களில் தமிழ், கன்­­­­­­­ன­­­­­­­டம், தெலுங்கு, மலை­­­­­­­யா­­­­­­­ளம் எனத் தென்­­­­­­­னிந்­­­­­­­தி­­­­­­­யத் திரைப்­­­­­­­பட உலகில் தனக்­­­­­­­கென ஒரு முத்திரை பதித்­­­­­­­­­­துள்ள சுகாசினி, "சைமா விருது நிகழ்ச்சி ஒரு ஒன்­­­­­­­று­­­­­­­கூ­­­­­­­டல் நிகழ்வு," என்றார். "நான்கு மொழி­­­­­­­களைச் சேர்ந்த நடி­­­­­­­கர்­­­­­­­கள் பலரை­­­­­­­யும் பார்க்க சந்தர்ப்­­­­­­­பம் கிடைக்­­­­­­­கிறது. என் நண்­­­­­­­பர்­­­­­­­களை­­­­­­­யும் அடுத்த தலைமுறை நடி­­­­­­­கர்­­­­­­­களை­­­­­­­யும் சந்­­­­­­­திக்­­­­­­­கும் தளமாக இந்­­­­­­­நி­­­­­­­கழ்ச்­­­­­­­சியைக் கரு­­­­­­­து­­­­­­­கி­­­­­­­றேன்," என்று கூறினார் சுகாசினி.

'சைமா' விருது நிகழ்ச்­­­­­­­சி­­­­­­­யில் 'ஓ! காதல் கண்மணி' தமிழ் திரைப்­­­­­­­ப­­­­­­­டத்தை இயக்­­­­­­­கி­­­­­­­ய­­­­­­­தற்­­­­­­­காக 'சிறந்த இயக்­­­­­­­கு­­­­­­­நர்' விரு­­­­­­­துக்கு இவரின் கணவர் மணி­­­­­­­ரத்­­­­­­­னம் நிய­­­­­­­ம­­­­­­­னம் பெற்­­­­­­­றுள்­­­­­­­ளார் என்பது குறிப்­­­­­­­பி­­­­­­­டத்­­­­­­­தக்­­­­­­­கது. 'சைமா' எனும் தென்­­­னிந்­­­திய அனைத்­­­து­­­லக திரைப்­­­பட விருது விழாவில் பங்­­­கேற்க நேற்றுக் காலை 8.30 மணிக்­­­கெல்­­­லாம் சிங்கப்­­­பூர் வந்தடைந்தார் நகைச்­­­சுவை நடிகர் சதீஷ் முத்­து ­கி­­­ருஷ்­­­ணன். சாங்கி விமான நிலை­­­யத்­­­தில் மலர்ந்த முகத்­­­து­­­டன் காணப்­­­பட்ட அவரை அணுகி விருது நிகழ்ச்­­­சி­­­யில் அவரது பங்கு என்ன என்­­­பதைக் கேட்­­­ட­­­றிந்தது தமிழ் முரசு. "தமிழ், மலை­­­யா­­­ளப் பிரிவு விருது நிகழ்ச்­­­சியை நானும் 'மிர்ச்சி' சிவாவும் சேர்ந்து அட்­­­ட­­­கா­­­ச­­­மாக வழி­­­ந­­­டத்­­­த வி­­­ருக்­­­கி­­­றோம்," என்ற அவர், சிங்கப்­­­பூ­­­ரும் இங்கு வாழும் மக்­­­களும் தமக்கு நன்கு பழக்­­­க ­­­மா­­­கி­­­விட்­­­ட­­­தா­­­கத் தெரி­வித்­­­தார். அண்மை­­­யில் சிங்கப்­­­பூ­­­ரில் பட­­­மாக்­­­கப்­­­பட்ட 'பறந்து செல்ல வா' திரைப்­­­ப­­­டத்­­­தில் நடிப்­­­ப­­­தற்­­­காக இங்கு சில மாதங்கள் கழித்­­­ததை அவர் நினை­­­வு­­­கூர்ந்தார்.

சாங்கி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய நயன்தாரா (இடமிருந்து இரண்டாவது), விஷ்ணு சிவன் (வலக்கோடி), ராதிகா, விக்ரம், நித்யா மேனன் ஆகியோர் ஏற்கெனவே இங்கிருக்கும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து இன்றைய நிகழ்ச்சிக்கு மெருகேற்ற இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!