பட்டதாரி: 5 இளையர்களின் கதை

ஜெஸ் மூவிஸ் தயாரித்துள்ள படம் 'பட்டதாரி'. இதில் அபி சரவணன் முக்கிய நாயகனாக நடிக்கிறார். அதிதி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சங்கர், செந்தில், கார்த்திக், ஆனந்த், ராசிகா ஆகி யோர் முக்கிய வேடங்களை ஏற்றுள் ளனர். மேலும் மகாநதி சங்கர், கிரேன் மனோகர், கலையரசன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

எஸ்.எஸ்.குமரன் இசையமைக்க, சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி, இயக்கி வருகிறார் சங்கரபாண்டி. மதுரை யைக் களமாகக் கொண்டு உருவாக் கப்பட்டுள்ள கதையாம். பட்டப் படிப்பை முடித்துவிட்டு சில ஆண்டு கள் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? வாழ்க்கை யில் நினைத்ததைச் சாதித்தார் களா என்பதுதான் கதைக்கரு.

"அபி சரவணன் ஏற்கெனவே ரசிகர்களுக்கு அறிமுகமானவர். கதாநாயகி அதிதி கேரளாவைச் சேர்ந்தவர். இரண்டாவது நாயகி ராசிகா சென்னையைச் சேர்ந்தவர். "நாயகனின் நண்பர்கள் 4 பேர் அவரை சந்திக்க வருகிறார்கள். ஐந்து பேருக்குமே தனித்தனி காதலிகள், தனித் தனிப் பிரச்சி னைகள். அதையெல்லாம் எப்படிச் சமாளித்தார்கள் என்பதை வித்தி யாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன்.

"இதில் நடிக்கும் நான்கு இளைஞர்களுமே கூத்துப் பட்ட றையைச் சேர்ந்தவர்கள். அதனால் நடிப்பில் எந்தக் குறையும் வைக்க வில்லை. யதார்த்தமான போக்கில் கதை சொல்லி இருக்கிறேன்." இப்படத்தின் படப்பிடிப்பின் போது நாயகன் அபி, மர்ம நபர் களால் தாக்கப்பட்டாராமே?

"அது பொய். யாரோ கிளப்பி விட்ட புரளி. அது இலவச விளம் பரமாக அமைந்ததில் மகிழ்ச்சி," என்கிறார் சங்கரபாண்டி.

'பட்டதாரி' படப்பிடிப்பில் அபி சரவணன், அதிதி, ராசிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!