திரிஷா: மருத்துவ மாணவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்

அண்மை­யில் பெண் நாய் ஒன்றினை மருத்­து­வக்­ கல்­லூரி மாண­வர்­கள் இருவர் நான்கா­வது மாடி­யி­லி­ருந்து கீழே வீசிய சம்ப­வத்தை திரிஷா வன்மை­யா­கக் கண்­டித்து, அந்த மாண­வர்­களின் மருத்­து­வப் படிப்­பிற்­கான உரி­மத்தை ரத்து செய்­ய­வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­தி­ருக்­கிறார். நடிகை திரிஷா 'பீட்டா' விலங்­கு­கள் நல அமைப்­பில் உறுப்­பி­ன­ராக இருக்­கிறார். இவ­ருக்கு நாய்கள் என்றால் அலாதிப் பிரியம். தெருக்­களில் கவ­னிப்­பா­ரின்றி கிடக்­கும் நாய்­களைக் கண்டால் அதைத் தூக்­கிச்­சென்று அதற்கு சிகிச்சை அளித்து பாது­காப்­பான இடங்களில் ஒப்­படைப்­பதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கிறார்.

இந்­நிலை­யில் மாணவர் ஒருவர் நாய்க்­குட்­டியை நான்கா­வது மாடி­யி­லி­ருந்து கீழே வீசுவதிலிருந்து அந்த நாய் கீழே விழுந்து துடிக்­கும் வரை பதிவான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பர­ப­ரப்பை ஏற்­படுத்­தின. அந்தக் காணொ­ளியைப் பார்த்த விலங்கு நல ஆர்­வ­லர்­கள் அந்த மாண­வர்­களுக்கு எதிராக கண்ட­னங்களை வலைத்­த­ளங்களில் பதிவு செய்­த­னர். அதன் தொடர்­பாக நாகர்­கோ­யில், திரு­நெல்­வே­லியைச் சேர்ந்த சுதர்­சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இரு­வர்­தான் நாயைத் துன்­பு­றுத்­தி­னர் என்­ப­தும் இரு­வ­ரும் குன்றத்­தூர் அரு­கே­யுள்ள தனியார் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் இறு­தி­யாண்டு பயில்­ப­வர்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்தது. இது­தொ­டர்­பாக மாண­வர்­கள் இரு­வ­ர் மீதும் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது. இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்டு, பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

இத­னிடையே நடிகை திரிஷா இந்த சம்ப­வத்­திற்­குத் தன் 'டுவிட்­டர்' பக்­கத்­தில் கண்ட­னம் தெரி­வித்­துள்­ளார். அதில் அவர் "கீழே விழுந்த நாயைக் காப்­பாற்­றிய நிஜ கதா­நா­ய­கர்­க­ளான ஷ்ராவன், ஜெனிபர், ஆண்டனி ஆகி­யோ­ருக்கு நன்றி. இந்தக் குற்றச்செயல் புரிந்த­வர்­களின் மருத்­துவ உரி­மத்தை சம்பந்தப்­பட்ட துறை­யி­னர் ரத்து செய்­ய­வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று கூறி­யி­ருக்­கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!