ஒரே மேடை; 3 நாயகர்கள்

'சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த தத்துவத்தை உண்மையாக்குவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய மூவருக்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் நடப்பதாக ஊடகங்கள் குறிப்பிட்டு வந்த நிலையில், மூவரும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்தி ருந்த நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடை பெற்றது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'முடிஞ்சா இவனை புடி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு சுவாரசியம் நடந்தது. இப்படத்தின் கதாநாயகன் சுதீப். நித்யா மேனன் நாயகி யாக நடித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், "நான் இந்த மூன்று பேர் நாயகனாக நடிக்கும் படங்களிலும் இப் போது நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதற்காக மட் டும் நான் அவர்களை இந்த விழாவுக்கு அழைக்கவில்லை. நான் வெறும் நடிகன் மட்டுமல்ல; இப்போதும் படங்களை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்வதற்குத்தான். அவர் களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!