வலைத்தளங்களில் வெளியான கபாலி

உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் நேற்று கபாலி திரையிடப்பட்டதால் கபாலி காய்ச்சல் உச்சக்கட்டத்தை தொட் டுள்ளது. எங்கு பார்த்தாலும் கபாலி பேச்சுதான். எங்கு பார்த்தாலும் கபாலி செய்திதான். பதாகைகள், தகவல்கள், சமூக ஊடகங்கள் என பல்வேறு தளங்களையும் கபாலி ஆக்கிரமித்துள்ளது. இது மட்டுமல்லாமல் நுழைவுச் சீட்டு முன்பதிவு, வெளி மாநிலங் களில் திரையீடு, வெளிநாடுகளில் திரையீடு, திரையரங்குகளின் எண்ணிக்கை, விளம்பரம், நுழைவுச்சீட்டு விலை, வியாபாரம், விநியோகம் என பல வகைகளில் கபாலி சாதனைகளைப் படைத்து 'கபாலிடா...' என்று முழங்கியிருக் கிறது.

தாணுவின் தயாரிப்பில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உரு வாகிய கபாலி படத்தின் முதல் முன்னோட்டக் காட்சி முதலில் மலேசியாவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து சிங்கப் பூரிலும் வளை குடா நாடுகளிலும் கபாலி வலம் வருகிறார். இந்தியாவில் நேற்றுக் காலை 4.00 மணிக்கு கபாலி முதல் காட்சி திரையிடப்பட்டது. இதையடுத்து ஒரு வலைத் தளத்தில் நேற்றுக்காலை 6.20 மணிக்கே கபாலி படம் முழுமை யாக வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த கபாலி படத்தின் தயாரிப்பாளர் வழக்குத் தொடுக்க முடிவு செய்தார். கலைப்புலி எஸ். தாணு தரப்பு வழக்கறிஞர் குருமூர்த்தி வலைத் தளத்தில் சட்டவிரோதமாக கபாலி படம் வெளியானது குறித்து நீதி மன்றத்தில் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கபாலி படத்தை பதிவேற்றம் செய்யவும் பதிவிறக் கம் செய்யவும் இந்தியாவில் உள்ள 169 இணையத்தள சேவை வழங் கும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கலைப் புலி தாணு தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!