உடல் எடையைக் குறைக்கும் ரம்யா

நடிகை ரம்யா நம்பீசன் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். 'பீட்சா', 'சேதுபதி' என விஜய் சேதுபதி படங்களில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த ரம்யா நம்பீசன் தற்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் 'புலி முருகன்' உள்பட சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ்ப் பட இயக்குநர்கள் சிலர் உடல் எடையை குறைத்தால் இன்னும் நிறைய படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் என்று அவரிடம் அறிவுரை கூறினார்களாம். மேலும், ரசிகர்களுக்கும் அவர் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனராம்.

இதையடுத்து உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார் ரம்யா. "தொடர்ந்து சில மாதங்கள் முயற்சி செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும் என என்னுடைய நலனில் அக்கறை உள்ளவர்கள் கூறியுள்ளனர். அந்த வார்த்தைகளை நம்புகிறேன். நிச்சயம் உடல் இளைத்த, கூடுதல் அழகுடன் கூடிய என்னை மிக விரைவில் காண்பீர்கள்," என்கிறார் ரம்யா நம்பீசன். அதற்கென்ன, காத்திருப்போம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!