4 கோடி கேட்கும் நயன்தாரா

நயன்தாரா சம்பளம் இப்போது நான்கு கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல். இது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அதன் பிறகு மெல்ல முன்னேறியவர், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அவ்வப்போது அவர் காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது, அவரது மதிப்பு குறையும், பட வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்றெல்லாம் சிலர் கணித்தனர்.

ஆனால் கோடம்பாக்க விவரப் புள்ளிகளின் இத்தகைய ஆரூடங்கள் பொய்யாகிப் போனதே தவிர, நயன்தாராவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இப்போது திரிஷா, பிரியா மணி, ஸ்ரேயா உள்ளிட்ட பல சம காலத்து நடிகைகள் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் அம்மணி. இவரைப் போலவே, அதிக படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப் பிடிக்க முடியவில்லை. சினிமாவில் அறி முகமான புதிதில் நயன் தாராவின் சம்பளம் 40 லட்சம்தான். ஆனால் ஒரு சில படங்களிலேயே அது ஒரு கோடி ரூபாயாக ஏற்றம் கண்டது. அதன் பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கிலும் பெரிய நாயகர்களுடன் நடித்தார். அண்மையில் அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி கண்டுள்ளன.

குறிப்பாக, 'மாயா' படத்தில் பேய் வேடத்திலும் 'நானும் ரவுடிதான்' படத்தில் காது கேளாத பெண்ணாகவும் தோன்றி னார். 'தனி ஒருவன்', 'இது நம்ம ஆளு' படங்களும் நன்றாக ஓடின. இதனால் அவரது சம்பளம் ரூ.3 கோடியை எட்டியது. இதையடுத்து, விக்ரமுடன் இவர் நடிக்கும் 'இருமுகன்', கார்த்தியுடன் நடிக்கும் 'காஷ்மோரா', ஜீவாவுடன் நடிக் கும் 'திருநாள்' உள்ளிட்ட படங்கள் அடுத்த டுத்து திரைக்கு வர இருக்கின்றன. இந்நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகைகள் வாங்கும் அதிக பட்ச சம்பளம் இரண்டு கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஒரு தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகி முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர கால்‌ஷீட் கேட்டதாகவும் அந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா நான்கு கோடி ரூபாய் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தொகையை கொடுத்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நடிகையை தேர்வு செய்வதா? என்று தயாரிப்பாளர் யோசனையில் மூழ்கி யுள்ளாராம்.

அவர் நயன்தாரா கேட்ட சம்பளத்தைக் கொடுக்கிறாரோ, இல்லையோ அது முக்கியம் அல்ல. இனி நடிக்கப் போகும் படங்களில் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்பதில் நயன்தாரா மிக உறுதியாக உள்ளார் என்பதே முக்கியம். அதேசமயம் மலையாளப் படங்களில் நடித்தால் மட்டும் தனது சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள முன் வருகிறாராம் நயன். காரணம், அங்கு நல்ல கதைகளாக அமைகிறதாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!