‘நான் மகிழ்ச்சியான பெண்’

இந்தியில் அறிமுகமானாலும் முழுக்க தமிழ்ப் பட நாயகியாக மாறிவிட்டார் ஹன்சிகா. தற்போது 'போகன்' படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இவை. இந்தப் பிறந்தநாளுக்கு நீங்கள் குழந்தை களைத் தத்தெடுக்கப் போவதில்லையாமே? "கடந்த பிறந்தநாளுக்கு 5 குழந்தைகளைத் தத்தெடுத்தேன். அவர்களையும் சேர்த்து மொத்தம் 31 குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால், இதற்கும் மேல் வேறு ஏதாவது செய்யவேண்டும் எனத் தோன்றியது. அத னால் சொந்தமாக இடம் வாங்கி அங்கு குழந்தைகள், முதியோர் இல்லம் கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளேன். அதற்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது."

சவாலான கதாபாத்திரங்களில் நீங்கள் நடிப்பதற்கு உங்கள் குழந்தை முகம் தடையாக இருப்பதாக நினைக்கிறீர்களா? "நானும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். 'அரண்மனை'யின் இரு பாகங்களும் என்னை ஒரு நல்ல நடிகையாக மக்களிடம் நிலைநிறுத்தியது. சவாலான கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் என் மனதுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந் தெடுத்து நடிக்கிறேன்." இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா உலகங்க ளில் உங்கள் மனம் கவர்ந்தது எது? ஏன்? "எந்த மொழியானாலும் ரசிகர்களின் மனம் கவரும் படங்களில் நடிப்பேன். இருந்தாலும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவளாகவே என்னைக் கருதுகிறேன். தமிழ்த் திரையுலகத்துடன் அதிக நெருக்கத் துடன் இருப்பதாக உணர்கிறேன்." நீங்கள் அதிகப்படியாக நடிப்பதாக சிலர் கூறுகிறார்கள். இதை யாராவது உங்களிடம் நேரில் கூறியிருக்கிறார்களா? "உணர்வுகளை நான் மிக ஆழமான பாவனைகளாக வெளிப்படுத்துகிறேன் என்று என் அம்மாவும் அடிக்கடி சொல்வார். இருந்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் என் நடிப்பைப் பற்றி இப்படி ஒரு விமர்சனம் நிலவுவது மகிழ்ச்சிதான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!