‘ரெமோ’ இயக்குநருக்கு அடித்தது யோகம்

'ரெமோ' படத்­தின் இயக்­கு­நர் பாக்யராஜ் கண்ணன். சிவ­கார்த்­தி­கே­ய­னின் அடுத்­த படத்தையும் இவரே இயக்குவதற்கு ரூபாய் 5 கோடி சம்ப­ளம் பேசப்­பட்­டி­ருக்­கிற­தாம். சிவ­கார்த்­தி­கே­யன் தன்­னுடைய நண்பர் பெயரில் தயா­ரித்து வரும் முதல் தயா­ரிப்­பான 'ரெமோ' திரைப்­ப­டம் ஆயு­த­பூசை விடு­முறையை முன்­னிட்டு அக்­டோ­பர் முதல் வாரம் வெளி­யா­க­வி­ருக்­கிறது. பாண்­டி­ய­ரா­ஜின் உதவி­யா­ள­ரான பாக்­ய­ராஜ் கண்ணன் இயக்­கும் இந்தப் படத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் ஜோடியாக கீர்த்­தி சுரேஷ் இணைந்து நடித்து­ள்­ளார். அனிருத் இசை அமைத்­துள்ள இப்­ப­டத்­தின் முன்­னோட்­டம் ரசி­கர்­களி­டத்­தில் பெரும் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது.

இந்­நிலை­யில் 'ரெமோ' படத்­தின் பாடல்­களை செப்­டம்பர் 5ஆம் தேதி வெளியிட முடிவு செய்­தி­ருக்­கிறார்­கள். இதனை இப்­ப­டத்­தின் தயா­ரிப்பு நிறு­வ­னமே அதி­கா­ரபூர்­வ­மாக வெளி­யிட்­டுள்­ளது. இதற்­கிடை­யில் 'ரெமோ' படத்­தின் முதல் பிரதியை ஒளிப்­ப­தி­வா­ளர் பி.சி.ஸ்ரீராம், சிவ­கார்த்­தி­கே­யன், அவரது நண்பர் ஆர்.டி.ராஜா ஆகியோர் அண்மை­யில் பார்த்­துள்­ள­னர். அவர்­களுக்கு 'ரெமோ' படம் மிகவும் பிடித்­து­விட்­ட­தாம். எனவே சிவ­கார்த்தி­­கே­யன் நடிப்­பில் மீண்டும் ஒரு படம் இயக்­கும் வாய்ப்பை பாக்­ய­ராஜ் கண்­ண­னுக்கு வழங்­கி­யுள்­ள­னர்.

அவர் இயக்­கும் அடுத்த படத்தை­யும் சிவ­கார்த்­தி­கே­ய­னின் நிறு­வ­னமே தயா­ரிக்க முடிவு செய்­துள்­ளது. அது மட்­டு­மல்­லா­மல் 'ரெமோ' படத்தை இயக்க பாக்­ய­ராஜ் கண்­ண­னுக்கு சில லட்­சங்கள் சம்ப­ளம் கொடுத்த ஆர்.டி. ராஜா, இரண்டா­வது படத்தை இயக்க ரூபாய் 5 கோடி சம்ப­ளம் தரச் சம்மதித்து இருக்கிறார். திடீ­ரென்று பாக்யராஜ் கண்­ண­னுக்கு அடித்த யோகத்தைப் பற்­றித்­தான் தற்­பொ­ழுது கோலி­வுட்­டில் அதிகம் பேசப்­படு­கிற­தாம். இதற்­கிடை­யே படத்­தின் நாய­கி­யும் இந்தப் படத்­தின் மூலம் தனக்கு இனிமேல் அதிகப் படங்கள் வர வாய்ப்பு இருக்­கிறது என்ற கன­வு­ல­கில் மிதந்து கொண்­டி­ருக்­கிறா­ராம். இவர் நடிப்­பில் 'ரெமோ', 'தொடரி', தெலுங்­கில் 'நீனு லோக்கல்', 'அய்னா இஷ்­ட­முனு நுவு' ஆகிய படங்கள் அடுத்­த­டுத்து வெளி­யா­க­வுள்­ளன.

அந்தப் படங்களுக்­குக் கிடைக்­கும் வர­வேற்பைப் பொறுத்து 'பாலிவுட்'டில் கால் பதிப்­ப­தற்கு முயற்சி செய்­ய­லாமா என முடி­வெ­டுக்­கப் ­போ­கிறா­ராம். தமிழ், தெலுங்­கில் வெற்­றிக­ர­மான நடிகை­யாக வலம் வந்த அசின் பாலி­வுட்­டுக்­குச் சென்ற­தும் காணாமல் போனது பற்றி கீர்த்தியிடம் சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதனால், 'அகல கால் வைக்­கும்­போது யோசித்­துத்­தான் செயல்­பட வேண்டும்' என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கிறார் கீர்த்­தி சுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!