சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கிடாரி’

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கிடாரி' மற்றும் விதார்த்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'குற்றமே தண்டனை' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. 'வெற்றிவேல்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் படம் 'கிடாரி'. அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகியாக நிகிலா விமலும் முக்கிய வேடங்களில் சுஜா வருணீ, நெப்போலியன், வேலார் ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

'ராஜதந்திரம்', 'மோ' படங்க ளில் நடித்த தர்புக சிவா இப்படத் தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழு தணிக் கைக்கு விண்ணப்பித்தது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு வன்முறைக் காட்சிகள் அதிகமிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. தணிக்கையைத் தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என சசிகுமார் அறிவித்தார். அதே நாளில் விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குற்றமே தண்டனை' திரைப்படமும் வெளி யாகிறது. இதனால் சசிகுமாருடன் விதார்த் நேரடியாக பாக்ஸ் ஆபி சில் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!