‘கனவு போல் இருக்கிறது’

தனு‌ஷுடன் 'தொடரி', சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', பாபி சிம்ஹாவுடன் 'பாம்புச் சட்டை' என இவை எல்லாவற்றையும் விட விஜய் படத்தின் அடுத்த நாயகி என்று கீர்த்தியைக் கொண்டாடுகிறார்கள் தமிழ்ச் சினிமா ரசிகர்கள். இந்த ஆண்டு கீர்த்தி சுரே‌ஷின் ஆண்டு எனலாம். மகிழ்ச்சியும் பரபரப்புமாக இருந்தாலும் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அவர் தயங்குவதே இல்லை. "சிறு வயது முதலே சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதே என் ஆசை, லட்சியம் எல்லாம். அப்பா சுரேஷ்குமார் மலையாளத்தில் நிறைய படங்கள் தயாரித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அம்மா மேனகாவைப் பற்றியும் தனியே சொல்லத் தேவையில்லை.

"அப்பா தயாரித்த 'பைலட்ஸ்', 'அச்சனயானு எனிக்கு இஷ்டம்', 'குபேரன்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித் தேன். கதாநாயகியாக நான் நடித்த முதல் படமே மிகப் பிரமாண்டமான தயாரிப்பு. "முதல் படத்திலேயே இரு வேடங்களில் நடித்தேன். படத்தின் பெயர் 'கீதாஞ்சலி'. பிரியர்தர்ஷன் இயக்கத்தில் நடித்தேன். மோகன்லால் அப் படத்தில் அசத்தி இருப்பார். நீங்கள் சிவகார்த்திகேய னின் ரசிகையா? "எந்த அர்த்தத்தில் இந்தக் கேள்வி கேட்கப்படு கிறது என்பது தெரிய வில்லை. நானும் சிவாவும் தமிழ்ச் சினிமாவில் ராசி யான ஜோடியாகி விட்டோம். உண்மையில் என் அம்மா தான் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை.

"நான் அடுத்தடுத்து ' ரஜினிமுருகன்' , 'ரெமோ' என அவருடன் நடிப்பதில் அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கேட்பதைவிட 'சிவா எப்படி நடித்தார், அடுத்து என்னவெல்லாம் படம் செய்யப் போகிறார்' என அவரைப் பற்றியே ஆர்வத்துடன் விசாரிப்பார். விஜய் ஜோடியாக நடிக்கிறீர்களே? "சத்தியமாக இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் கனவு போல் இருக்கிறது. 'போக்கிரி' வெற்றி விழாவுக்காக அவர் திருவனந்தபுரம் வந்தபோது கூட்டத்தோட கூட்டமாக நின்று 'இளைய தளபதி வாழ்க' என்று குரல் கொடுத்தவள் நான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!