விஷ்ணு ஜோடியாக கேத்ரின் தெரசா

‘மெட்ராஸ்’, ‘கணிதன்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கேத்ரின் தெரசா. இவர் விஷ்ணு ஜோடியாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வந்தார். சுசீந்திரன் எழுதிய இக்கதையை ‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கி வந்தார். சென்ற வருடம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு சத்தமில்லாமல் பட வேலைகள் அடங்கிப்போயின. இதற்கிடையில் விஷ்ணு சொந்தமாக தயாரித்து நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைக்கு வந்தது. அது அவருக்கு லாபகரமான படமாக அமைந்தது. இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் நடிக்கிறார் விஷ்ணு. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து விஷ்ணு மீண்டும் சொந்தப் படம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக கேத்ரின் தெரசா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கெனவே விஷ்ணுவுடன் ஜோடியாக கேத்ரின் நடித்து வந்த ‘வீர தீர சூரன்’ படம் கைவிடப்பட்டதால், அதற்காக அவரிடம் வாங்கிய கால்‌ஷீட்டை தனது சொந்தப் படத்துக்கு விஷ்ணு பயன்படுத்திக்கொள்கிறாராம்.

Loading...
Load next