சிபிராஜுக்கு நம்பிக்கை தந்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’

சிபிராஜ் நாயகனாக நடிக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், சாந்தினி, காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், பேபி மோனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மணி செய்யோன் இப்படத்தை இயக்குகிறார். விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் சார்பில், மதுசூதனன் கார்த்திக், சிவக்குமார், வெங்கடேஷ், லலித் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். “இதுவரை ரசிகர்கள் கண்டிராத நாகரிக இளைஞன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கும் இப்படமானது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.

 

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்