பிரிந்த காதலர்கள்: சமூக வலைத்தளத்தில் தகவல்

திரையுலகில் நடிகர் நடிகைகள் காதலிப்பதும் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிவதும் சாதாரணமாகிவிட்டது. அந்த வரி சையில் தற்போது வரலட்சுமியின் காதலும் முறிந்துவிட்டதாக வெளி வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலும் வரலட்சுமியும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகுவதாகக் கூறி வந்தனர். ஆனால், இருவரும் காதலர்கள் என்பதை இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் காதலிக்கவில்லை என்றும் கூறவில்லை.

விஷாலும் வரலட்சுமியும் காத லித்து வருவதாக நீண்ட நாட்க ளாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் வரலட்சுமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவு செய்துள் ளார். “காதல் முறிவுகள் இப்போது மிகவும் மோசமான நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. ஏழு ஆண்டுகளாக இருந்த காதலை ஒருவர் தனது மேலாளர் மூலமாக முறிந்துவிட்டதாகச் சொல்லி அனுப்புகிறார். உலகம் எங்கே போகிறது? காதல் எங்கே இருக்கிறது?,” என்று வரலட்சுமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தப் பதிவில் காதலர் யார் என்பதை வரலட்சுமி குறிப்பிடவில்லை. இருப்பினும் தனது காதல் முறிவு குறித்து மட்டும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

‘மதகஜராஜா’ படத்தில் விஷால், வரலட்சுமி.

Loading...
Load next