டிஜிட்டல் பதிப்பில் எம்ஜிஆர் படம்

எம்ஜிஆர், மஞ்சுளா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டலில் வெளியாக உள்ளது. எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் புதுப் பொலிவுடன் டிஜிட்டல் பதிப்பாக விரைவில் வருகிறது. இதில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நாகேஷ், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன், மேட்டா ரூங்ராத் (தாய்லாந்து) ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ். விசுவநாதன் இசையில் கண்ணதாசன், புலமைப்பித்தன், வாலி, புலவர் வேதா ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பொருட்காட்சியிலும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளிலும் படத்தைப் பிரமாதமாகப் தயாரித்திருந்தார் எம்ஜிஆர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்