நவம்பரில் தொடங்கும் சிவாவின் படம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் நவம்பரில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து அவரது நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டு படங்களை அடுத்தடுத்து தயாரிக்கிறது. அதில் முதல் படமாக மோகன் ராஜா இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார் ஆர்.டி.ராஜா.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், பகத் பாசில், சினேகா, ரோகிணி, சதிஷ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கப்போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி