கவனமாக இருக்கும் நிக்கி கல்ராணி

தன்னைப் பற்றி கிசுகிசுக்கள் வருவதில்லையே என பலரும் கேட்பதாகச் சொல்கிறார் நிக்கி கல்ராணி. இதில் எந்த ரகசியமும் இல்லை என்றும் தன்னைப் பற்றி கிசுகிசுக்கள் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருப்பதாகவும் சொல்கிறார். “இதற்காக தனியாக எதுவும் திட்டமிடுவதில்லை. வீட்டில் இருந்து கிளம்பி நேராகப் படப்பிடிப்புக்குச் செல்வேன். படப்பிடிப்பு முடிந்ததும் வீடு திரும்பிவிடுவேன். இதுதான் என் பழக்கம். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலேயே என் குடும்பத்தாருடன் பொழுதுபோக்க விரும்புவேன்.

“நான், என் சகோதரி, எனது செல்ல நாய்க்குட்டியுடன் நேரத்தைச் செலவிடுவதில்தான் எனக்கு அலாதி ஆனந்தம். மேலும் நான் பெண்களுக்கான பள்ளி, கல்லூரியில் படித்ததால் ஆண்களுடன் பழகும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கவில்லை. திரையுலகிலும் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. “அதனால் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதனால்தான் என்னைப் பற்றி எந்தக் கிசுகிசுக்களும் வருவதில்லை,” என்கிறார் நிக்கி கல்ராணி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’