‘வேலையில்லா பட்டதாரி’ 2ஆம் பாகம்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. தனு‌ஷின் 25ஆவது படமாக வெளிவந்த இப்படத்தின் கதை மட்டுமல்லாது அனிருத் தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தனுஷ் தனது அடுத்த படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தைக் கலைப்புலி எஸ்.தாணுவும், தனு‌ஷுடன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க முடிவாகியுள்ளது. இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

14 Nov 2019

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’

நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். 

14 Nov 2019

‘பட்டாம்பூச்சிகள் பறக்கும்’