மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இப்போது நடிக்க வந்துள்ளார். 'டிக் டிக் டிக்' படத்தில்தான் ஆரவ், அப்பா ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். "என் மகனுடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவன் அவனை ஆசீர்வதிக் கட்டும்," என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. 'போகன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி அந்தப் படத்தை முடித்த கையோடு ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். பல இயக்குநர்கள் அவரை அணுகியபோதும் அமலாபால் விவாகரத்து காரணமாக அமைதி யில்லாமல் இருக்கும் விஜய்க்கு, உடனே 'கால்‌ஷீட்' கொடுத்தால் படப் பணிகளில் இறங்கி சொந்தப் பிரச்சினையை மறந்துவிடுவார் என்ற நல் எண்ணத்தாலேயே முன்னுரிமை கொடுத்தாராம் ஜெயம் ரவி. இப்படத்தில் ஜெயம் ரவி ஆதிவாசியாக நடிக்கவிருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!