ஸ்ரீதிவ்யாவை மொய்த்த கிராமத்து ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, ரெமோவில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அதையடுத்து அவரிடத்தில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு, நான் அவருடன் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளன என்று கூறினார். “கூடிய சீக்கிரமே அவருடன் மீண்டும் ‘டூயட்’ பாடுவேன் என்று நம்பிக்கையுடன் சொன்னவர், அது மீண்டும் சிவகார்த்திகேயன்- பொன்ராம் இணையும் படமாகக்கூட இருக்கலாம் என்றார். இந்த நிலையில் காஷ் மோராவிற்குப் பிறகு தற்போது மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற படங்களில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா,

இந்தப் படங் களுக்காக வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றபோது தன்னைப் பார்க்க கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வந்ததாகச் சொல்லி சிலிர்த்துப்போகிறார். அப்படி வந்தவர்கள், அவர் நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லியதோடு, நகர பாங்கான வேடத்தைவிடக் கிராமத்து வேடத்தில் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறினார். களாம். அதனால் இனிமேல் கிராமத்துக் கதைகளுக்கு முன் னுரிமை கொடுக்கப்போவதாக சொல்லும் ஸ்ரீதிவ்யா, மாவீரன் கிட்டுவுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் தனக்குப் பெரிய இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்