மீண்டும் தமிழ்ச் சினிமாவில் கஜோல்

பிரபுதேவா, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழிலும் புகழ்பெற்ற நடிகை கஜோல், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ச் சினிமாவில் நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிக்க, சௌந்தர்யா ரஜனி இயக்கத்தில் உருவாக உள்ள 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் 2ஆம் பாகத்தில் கஜோலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட கஜோலும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். இதற்கு முக்கிய மாக இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அவரின் கதாபாத்திரம், மற்றொன்று அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளமும்தான் என்கிறார்கள். பாலிவுட்டில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவரான நடிகை கஜோல், தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள படத்தை கஜோலின் கணவர் அஜய் தேவ்கனே தயாரிக்க உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!