விஷால்: பிளவு ஏதும் இல்லை

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்தவொரு பிளவும் இல்லை என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சோ ராமசாமி இருவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது நடிகர் சங்கத் தலைவர் நாசருடன் துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டுமே வந்தனர். சங்கத்தின் செயலாளர் விஷால் தனியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். விஷால் தனியாக வந்தவுடன், அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் விஷால். "எனக்கு சில நாட்களாக கடுமையான காய்ச்சல். படப்பிடிப்பைக் கூட ரத்து செய்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா, பழம்பெரும் நடிகர் சோ இருவருக்கும் அஞ்சலி செலுத்த நடிகர் சங்க நிர்வாகிகள் சென்றபோது, என்னால் அவர்களோடு இணைந்து வரமுடியவில்லை. "இது இப்படியொரு செய்தியாகும் என்று நினைக்கவில்லை. மேலும், நடிகர் சங்க அலுவல கத்தில் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோருடன் இப்போதுதான் பேசிக்கொண்டிருந்தேன். "சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. கலைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். எனவே இதில் பிரிவினை, பிளவு என்கிற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை," என்கிறார் விஷால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!