ரகுமான் நடிக்கும் புதிய படம் ‘பகடி ஆட்டம்’

அண்மையில் ரகுமான் நடிப்பில் 'துருவங்கள் 16' படம் வெளியீடு கண்டது. இப்படத்தில் ரகுமான் காவல்துறை அதிகாரியாக நடித்தி ருந்தார். இதில் ரகுமானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் இணையத்தளங்க ளும் ரகுமானின் நடிப்பைப் பாராட்டி விமர்சனம் செய்திருந்தன. இப்படத்தைத் தொடர்ந்து 'பகடி ஆட்டம்' என்ற படத்தில் தற்போது நடிக்கிறார். இதில் துப்பறியும் வேடத்தில் நடிக்கிறார்.

தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைத் தளங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்ப றிந்து வெளிச்சத்துக் கொண்டு வரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார். பெண்களுக்கு விழிப்புணர்வு கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ராம் கே.சந்திரன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். 'மாரம் மூவிஸ்' மற்றும் 'பரணி மூவிஸ்' பெருமையுடன் வழங்கும் 'பகடி ஆட்டம்' படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகி யோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். வி.டி.நிறுவனம் இப்படத்தை உலகம் எங்கும் வெளியிட இருக்கிறது. இப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டிருக்கிறார்.

'துருவங்கள் பதினாறு' படத்தின் படப்பிடிப்பில் ரகுமான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!