பி.வாசு: ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது

தான் 35 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருப்பதாகவும் தான் ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருப்பதில் திருப்தி அடைவதாக வும் கூறுகிறார் இயக்குநர் பி.வாசு. அவர் தற்போது 'சிவலிங்கா' படத்தில் மும்முரமாகப் பணி யாற்றிக் கொண்டிருக்கிறார். "என் கனவும் தற்போது புதி தாக இயக்குபவர்களின் கனவும் ஒன்றுதான். கனவுக்கும் கற்ப னைக்கும் வயது இல்லை. கடந்த 35 வருடங்களாகத் திரைத்துறை யில் இருக்கிறேன். அனைத்து இயக்குநர்கள் எடுக்கும் படங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடை யவைதான்.

'சிவலிங்கா' நாயகன் குறித்து? "என்னைப் பொறுத்தவரையில் என் படத்தின் கதாநாயகனுக்கு நடிப்பில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். 'சிவலிங்கா' கன்னட படத்தின் நாயகனாக சிவராஜ்குமார் நடித்தி ருந்தார். அவர் நட்சத்திர நாயகன். நூறு படங்களுக்கும் மேல் நடித் தவர். அதன் தமிழ்ப் பதிப்பில் அதே போல் அனுபவமுள்ள நல்ல நடிகர் தேவைப்பட்டார். அதற்கு லாரன்ஸ் கச்சிதமாக அமைவார் எனத் தோன்றியது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். "லாரன்ஸ் நல்ல நடிப்பு மட்டு மல்ல, நல்ல நகைச்சுவை உணர் வும் கொண்டவர். சண்டைக் காட் சிகளிலும் கலக்குவார். இதில் அவர் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்கிறார்.

'சிவலிங்கா' படத்தில் ஜோடி சேர்ந்துள்ள லாரன்ஸ், ரித்திகா சிங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!