விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் லட்சுமி மேனன்

கோலிவுட்டில் கிராமத்துக் கதை என்றால் லட்சுமி மேனனைத்தான் அழைத்தார்கள். தொடர்ந்து கிராமத்து வேடங்களாக நடித்தால் தன்னை நாகரீக உடையணிந்து நடிக்க விடமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்த லட்சுமி மேனன், தன்னைத் தேடி வந்த பல கிராமத்துக் கதை சார்ந்த படங்களில் நடிக்க மறுப்புத் தெரிவித்தார்.

தற்பொழுது அவர் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அவரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தவிர்க்க ஆரம்பித்தனர். அதனால் படங்களே இல்லாமல் இருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் 'கருப்பன்' படம் தேனியில் நடக்கும் கிராமத்துக் கதையாக இருந்தபோதும் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரே‌ஷுக்குத்தான் முதலில் சென்றது. ஆனால் 'கால்சீட்' பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை. அதையடுத்து 'ஆண்டவன் கட்டளை'யில் விஜய் சேதுபதியுடன் நடித்த ரித்திகா சிங்கை அணுகினர். அவரும் வேறு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்ததால் இறுதியாக லட்சுமி மேனனுக்கு அந்த வாய்ப்பு சென்றது.

'றெக்க' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தபோது உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார். அதனால் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் தயக்கத்துடன் இரண்டு மனதாக இருந்தார். அரைகுறை மனதுடன் லட்சுமி மேனனை சில படங்கள் எடுப்பதற்காக வரவழைத்தனர். அவரை நேரில் பார்த்ததும் அசந்துபோய்விட்டனர். காரணம் லட்சுமி மேனன் எடை குறைந்து ஒல்லியாக இருந்தார்.

அதனால் பரவசமடைந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் அவரை உடனே விஜய் சேதுபதியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். லட்சுமி மேனனும் இன்னும் ஐந்து கிலோ எடை குறைக்க உடற்பயிற்சி செய்து கொண்டி ருப்பதாகக் கூறிச் சென்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!