இன்று புது கட்டட அடிக்கல் நாட்டு விழா

சென்னையில், இன்று நடிகர் சங்க புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினி, கமல் இருவரும் முதல் செங்கலை எடுத்து வைத்து கட்டட பணியைத் தொடங்கி வைக்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமை யிலான அணியினர், 'நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவோம்' என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, புதிய கட்டடம் ரூ.26 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது 4 மாடிகளைக் கொண்டது. இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ அரங்கு, உடற்பயிற்சி மையம், நடன அரங்கம், சங்க அலுவலகம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. திரைப்பட துறையினர் அனைவரை யும் அழைத்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!