திரையுலகில் ஆண் ஆதிக்கம் என்கிறார் டாப்சி

'உன்ன வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? இல்ல வெயிலுக்குக் காட்டாம வளத்தாங்களா?' என்று தமிழ் நாடே டாப்சியை நினைத்து உருகியது ஒரு காலம். தனக்கு அழகும் நடிப்பும் இருந்தும் அவ்வளவாக வாய்ப்பு இல்லை என்றும் திரையுலகில் ஆண் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்றும் வருத்தப்படுகிறார் வெள்ளாவி நடிகை டாப்சி. தமிழில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த வெள்ளாவி தேவதை. 'பேபி', 'பிங்க்' படங்கள் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். இவர் நடிப்பில் தமிழில் வெளியான 'காஞ்சனா' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. '

காஞ்சனா'விற்குப் பிறகு தமிழில் 'காஸி' படத்தில் நடித்திருந்தார். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இவர் நடித்திருந்தார். அதையடுத்துத் 'தோணி' படத்தை எடுத்த நீரஜ்பாண்டே கதையில், ‌ஷிவம் நாயர் இயக்கத்தில் 'நான்தான் ஷபனா' படத்தில் டாப்சி நடித்துள்ளார். இந்தப் படத்தில் டாப்சிதான் நாயகி. கிட்டதட்ட ஜேம்ஸ்பாண்ட்போல நடித்துள்ளார். 'ஆக்‌ஷன் ' கலந்த 'திரில்லர்' கதை. கதாநாயகர்களுக்கு சவால் விடும் வகையில் டாப்சி சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!