தயாரிப்பாளருக்கு மனஉளைச்சல் தந்த தமன்னா

'குயின்' படம் தமிழில் எடுக்கப் படும் திட்டம் கைவிடப்பட்டதாக தமன்னா கூறியதால் தான் மனஉளைச்சல் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார் தியாகராஜன். கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான 'குயின்' படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மறுதயாரிப்பு செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார். 'குயின்' படத்தின் தமிழ் மொழி தயாரிப்பில், சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக இருந்தது. கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிப்பதாகவும் சொல்லப் பட்டது. இந்நிலையில் 'குயின்' படம் தமிழில் தயாராவது ரத்தாகி உள்ளதாக அண்மையில் செய்தி கள் வெளியாகின.

இதுகுறித்து நடிகர் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். "'குயின்' மறுதயாரிப்பு உரி மையை 3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளேன். "அப்படத்தை நான் வாங்கியது தெரிந்து, அதில் நடிக்கும் ஆர்வத் தோடு தன் தாயுடன் வந்து வாய்ப்பு கேட்டார் நடிகை தமன்னா. "நானும் அவரை இதில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய் தேன். இப்படத்தில் நடிக்கச் சம் பளமாக 3 கோடி ரூபாய் கேட்டார் தமன்னா. "என்னால் அவ்வளவு சம்பளம் தர இயலாது. இப்போது எவ்வளவு வாங்குகிறீர்களோ அதைத் தருகி றேன் என்றேன். முன்தொகை கேட்டார்கள். படம் ஆரம்பிக்கும் போது தருகிறேன் என்று கூறினேன்.

"முன்தொகை தராததால் 'குயின்' படத்தின் தமிழ் தயாரிப்பு ரத்தாகி உள்ளதாக தமன்னா கூறிவருகிறார். இதனால் திரை யுலகைச் சேர்ந்த பலரும் என் னிடம் விசாரித்து வருகிறார்கள். "இதனால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தமன்னா இல்லாவிட்டால் இந்தப் படத்தில் வேறொரு நடிகை நடிப்பார். "அவர் இல்லாமலும் 'குயின்' படத்தை தமிழில் எடுக்கமுடியும்," என்று கூறினார் தியாகராஜன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!